EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Mannar சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை.

Mannar சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை.

ஆவணி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த திருமதி மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை. குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை(9) மாலை மத்திய சுகாதார அமைச்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த மாதம் 28ம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மரணம் தொடர்பாக ஆரம்ப விசாரணைகள் பல கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளன. அதில் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

அதில் இரண்டு தாதிய உத்தியோகத்தர்களும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும், ஒரு மருத்துவரும் மன்னார் மாவட்டத்திற்குள் உள்ளக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிகிறோம்.

இது முற்றிலும் தவறானது. இந்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை. குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ தினத்தன்று சம்பந்தப்பட்ட யாவருக்கும் எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது ஒரு இடமாற்றமாக இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வைத்திய அதிகாரிகளை காப்பாற்றுவதாகவே அறிகிறோம். சட்ட வைத்திய அதிகாரி உள்ளதை உள்ளபடி அறிக்கை இடுவதற்கு நெருக்கடி ஏற்படுவதாகவும் அறிகிறோம்.

எனவே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்து போகிறது. வழமையான மருத்துவ தவறுகள் போல் இதனையும் மாற்றிவிட முனைவதாக நாம் எண்ணுகிறோம்.

தவறிழைத்தவர்கள் மீது கால தாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த எந்த ஒரு விசாரணையானது உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்தது இல்லை. இவ்வாறு அரைகுறையாக கண்டு பிடித்தவர்களுக்கு கூட நடவடிக்கை எடுத்தது இல்லை.

அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் சரி இந்த நாட்டின் சாபக்கேடு. நீதியை நிலை நாட்டுவதில் எப்பொழுதும் தோற்றே போகிறது இலங்கையின் ஜனநாயகம்.

இவ்வாறு தொடர்ந்து உண்மைகளை மூடி மறைத்தால் அரச வைத்தியசாலை மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

இதனால் பாதிக்கப்பட போவது சாமானிய பொதுமக்களே. எனவே இதன் மூலம் தனியார் வைத்தியசாலைகளை நாடும் நிலையை ஏற்படுத்த போகிறீர்களா? ஆகவே நீதி நிழலாடும் பட்சத்தில் வைத்தியசாலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In