EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Jaffna முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.

Jaffna முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.

ஆவணி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால் பயிற்றுவிக்கப்பட்ட 337 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதன்போது டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்துச் சிறப்பித்தார்.

நிகழ்வில் ஆளுநர் உரையாற்றுகையில் “குழந்தைகளை உருவாக்குவது என்பது பாரிய ஒரு பணி. ஒரு சிற்பத்தை செதுக்குவதற்கும், குழந்தைகளை உருவாக்குவதற்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை. குழந்தை பிறந்தது முதல் 7 வயதுக்குள் தனக்கு தேவையான அத்தனை விடயங்களையும் கற்றுக் கொள்வதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, குழந்தைகளின் முக்கியமான காலப்பகுதியை நீங்கள் உங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் ஆற்றுகின்ற பணி மிக முக்கியமானது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்று, குடும்பச் சுமையையும் தாங்கிக் கொண்டு நீங்கள் ஒரு பாரிய பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அதற்காக வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அத்தனை முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கௌரவத்துடன் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கான மறுசீரமைப்புகளை கல்வி அமைச்சு தற்போது மேற்கொண்டு வருகிறது.

உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் பல தடவைகள் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பள்ளிகளுக்கான செயற்பாடுகள் மற்றும் உங்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

நாட்டின் பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் “ஆறுதல்” நிறுவனத்தின் ஊடாக வடக்கு, கிழக்கில் சேவையாற்றக்கூடிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பாடநெறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக அனுசரணை வழங்கும் ரோட்டரி நிறுவனத்திற்கும் அதேபோல இந்த செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் “ஆறுதல்” நிறுவனத்திற்கும் வடக்கு மாகாணம் சார்பில் எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In