காலநிலை மாற்றத்தினூடாக உடல், உள ரீதியிலான தாக்கங்கள் எவ்விதமாக இருக்கிறது என்பதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஹொக்கி அணியுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை காவேரி கலா மன்றம் ஒழுங்குபடுத்தி நடாத்தியது.
விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான விடயத்தை சமூகத்தில் இருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மிக சிறப்பான விடயம் எனினும், விளையாட்டு வீரர்கள் சூழலியல் பார்வையில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதன் ஊடாக எவ்விதமாக உடல் ஆரோக்கியம் மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த செயற்பாட்டினை காவேரி கலா மன்றம் அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக தொழுநோயினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றபடியினால் அவைகளில் இருந்து நாம் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை பெறுவதற்கான ஒரு ஊக்கத்தையும் இந்த செயற்பாடுகள் கொடுக்கும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் விருந்தினர்கள், துறைசார் வைத்திய நிபுணர்கள், தொழுநோயாளர் மறு வாழ்வுக்கான சங்கத்தினர், காவேரி கலா மன்றத்தினர், யாழ்ப்பாண மாவட்ட ஹொக்கி அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.





