வவுனியாவில் சிசு ஒன்று இறந்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகப்பேற்றுக்காக குறித்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உரிய நேரத்தில் வைத்தியர்கள், பெண்ணை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தாத காரணத்தால் சிசுவொன்று மரணித்துள்ளதாக காணொளி ஒன்று வெளியானது.
சிசுவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்க் கொண்ட போது மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் சில மருத்துவ பிரச்சினைகள் இருந்ததாகவும் அதட்கேற்ப அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் புத்திரனை தெரிவித்துள்ளார்.