இந்தியா இலங்கை அரசின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் தமிழர்களை தோற்கடிப்பதற்காக பொது வேட்பாளர் பா. அரியேந்திரன் தேசிய தலைவருக்கும் விடுதலைப்புலிகளில் இருந்து உரிமைக்காக உயிர்கொடுத்து 50 ஆயிரம் மாவீரர்களுக்கும் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்த மண்ணிலே வாழ்ந்து பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 3 இலச்சத்துக்கு அதிகமான தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நா.உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை (21) நகரில் துண்டுபிரசுரம் வழங்கி பிரச்சாரம் கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் முன்னெடுத்த பிரச்சாரத்தில் கலந்துகொண்ட நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்
பிரதான பெரும்பான்மை வேட்பாளர் 3 பேரும் தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து அவர்களது முகவர்கள் தங்களுடைய தனிப்பட்ட குடும்பநலன்கள் இலாபங்களை கருத்தில் கொண்டு இந்த ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கின்ற அற்ப சொற்ப சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ்மக்களுக்கு பசப்பு வார்த்தை கூறி ஏமாற்றி அவர்களுடைய வாக்குகளை பேரினவாதிகளுக்கு கொடுப்பதற்கான பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்திய மேற்கு நாடுகளுடைய பின்னணியுடன் கடந்த 15 வருடங்களாக ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள்ளான 13 திருத்த சட்டத்தை தீர்வாக வலியுறுத்திவருகின்ற தரப்புக்கள் ஒன்றினைந்து பொதுவேட்பாளர் என்ற பேர்வையிலே தமிழர்களுடைய தேசிய அபிலா சைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப் போகின்றோம் என்ற ஒரு பேர்வையை போத்திக்கொண்டு முன்னாள் நா.உறுப்பினர் அரியேந்திரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதனூடாக எங்களுடைய மக்களை ஏமாற்றி வாக்களிக்க செய்கின்ற உபாயத்தை கையாண்டு வருகின்றனர்.
இலங்கையின் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டால்தான் தமிழ் மக்களுக்கான எதிர்காலம் உண்டு எனவே ஒரு பேரம் பேசுகின்ற வலிமைமிக்க சக்தியாக தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை மாற்றுகின்ற முயற்சியிலே எமது கட்சி தலைவரும் நா.உறுப்பினருடான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையிலான வழிநடத்தலிலே இந்த ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றோம்.
இலங்கை தீவில் சிங்கள பௌத்த பேரினவாத இனழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் முஸ்லீம் மக்களதும் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் அதனூடாகத்தான் இந்த தீவிலே தமிழர்களும் முஸ்லீம்களும் பாதுகாப்பான வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும் என வட கிழக்கில் வாழுகின்ற தமிழ் முஸ்லீம் மக்களிடம் வேண்டிக் கொள்கின்றோம்.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக போரடி பின்னர் ஆயுத ரீதியாக போராடி போது முஸ்லீம் சகோதரர்கள் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் போராட்டதை அழித்தொழிக்க முற்றுமுழுதாக இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்தார்கள். இவ்வாறு செயற்பட்டிருந்தும் கூட யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஒரு சில முஸ்லீம் இளைஞர்கள் 2019 உயிர்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து அதனை சாட்டாக வைத்து எந்த குற்றமும் செய்யாத இந்த நாட்டின் அபிவிருத்தியில் மிக பெரும் பொருளாதாரத்தில் பங்கு கொண்ட முஸ்லீம் சமூகத்தினர் முற்று முழுதாக குறிவைக்கப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு குறிவைக்கப்பட்டு அவர்களது பொருளாதாரம் பாரிய அழிவுளை ஏற்படுத்தி இலங்கை அரசு கட்டமைப்பு சார் இனழிப்பை முஸ்லீம் மக்களுக்கு எதிராக செய்தனர்.
எனவே இந்த தீவிலே ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி அமைப்பு கொண்டுவருகின்ற போது முஸ்லீம் மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரங்கள் முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படும் அதனை பேசி இனக்கத்துக்கு வரக்கூடியதாக இருக்கும். சட்டரீதியாக முஸ்லீம் தமிழ் மக்களுடைய உரிமைகளும் உறுதிப்படுத்தப்படவேண்;டும்
ஆகவே பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பந்தா பிடிப்பதன் மூலமாக இன்னொருவரின் உரிமைகளை இன்னொருவர் தட்டிப்பறிக்கின்ற அணுகுமுறையை கைவிடவேண்டும். அதேவேளை இந்த சமஸ்டி முறைமையினால் சிங்கள மக்களதும் எதிர்காலம் நன்றாக அமையும் எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கவும்.
இந்த தேர்தலில் பொது வேட்பாளர் என்ற மாயைக்குள் சிக்கி கொள்ளவேண்டாம் அரியேந்திரன் இது ஒரு பௌத்த நாடாகவும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக் கொண்ட ஒருவர் அவர் 2010 தொடக்கம் 2015 வரை நா.உறுப்பினராக இருந்தபோது சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக் கொண்டு 13 திருத்தசட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ள அவரது மறைந்த தலைவர் சம்மந்தன் , சுமந்திரன் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் உடந்தையாக செயற்பட்டவர்
அதன் பின்னர் ஏக்கிய ராஜ்சியத்தை எற்றுக்கொண்டு அரசியல் யாப்பு வரைவுக்கு பூரணமாக துணை நின்றவர் அதேபோன்று விக்கினேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் 13 திருத்த சட்டத்தை தீர்வாக 15 ஆண்டுகளாக வலியுறத்தி வருகின்றனர்.
இந்திய வெளிவிகார அமைச்சரை கடந்த யூன் மாதம் சந்தித்தபோது 8 போர் சென்றனர் இவர்கள் 13 திருத்த சட்டத்தை விலியுறுத்தினர் ஆகவே பொது வேட்பாளரை நிறுத்தி சர்வதேச சமூகத்துக்கு கூறப்போகின்றோம் என்று சொன்னவர்கள் பொது வேட்பாளர் என்பது ஒற்றையாட்சிக்குள் 13 திருத்த சட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒரு பௌத்த சிங்கள நாடு என ஏற்றுக் கொண்டு வாழ தயார் என்பற்கு தங்களுடைய வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை உலகிற்கு மட்டுமே சொல்ல முயல்கின்றனர்.
இவ்வாறு வேட்பாளரை நிறுத்துகின்ற போது பிரதான வேட்பாளர்களிடமிருந்து சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றது பிரதான வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவு வழங்க கோரி பல்வேறு கட்சிகளில் இருக்க கூடியவர்களை வளைத்து போடுகின்ற செயற்பாடு நடக்கின்றது
காலம் காலமாக எச்சிலிகைகாக அலைந்துகொண்டிருக்கின்ற இந்த பொது வேட்பாளரை நிறுத்தியுள்ள தரப்புக்கள் இந்தியா இலங்கை அரசின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை புறக்கணித்து அவர்கள் பேரம்பேசும் சக்தியாக உருவெடுப்பதை தவிர்ப்பற்காக தமிழர்களை தேற்கடிப்பதற்காக இந்த பணியை எடுத்துள்ளனர்.
அதனால் இவர்களுக்கு கிடைக்க கூடிய அற்ப சொற்ப சலுகைகளுக்காக பேராசிரியர் கணேசலிங்கம், ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம் போன்றவர்களும் இந்த கட்சிகளும் கூட்டினைந்து மிகப்பெரும் சதிச் செயலை செய்து கொண்டிருக்கின்றனர்.எனவே இதில் மக்கள் அகப்பட்டிவிடக் கூடாது ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
கடந்த காலத்தில் கோட்டா அறிதி பெரும்பான்மையால் வெற்றி பெறுவார் என இருந்த நிலமையிலும் கூட நாங்கள் தேர்தலை பகிஸ்கரிக்க சொன்னோம் ஆனால் இல்லை கோட்டாவை தோற்கடிக்க சஜித்துக்கு வாக்களிக்குமாறு சொன்னார்கள் அவர்களுக்கு தெரியும் சஜித் ஒரு போதும் வெல்லமாட்டார் என தெரிந்திருந்தும் கூட அவர்கள் கோட்டாவை தோற்கடிப்பதற்கு அல்ல மாறாக பகிஸ்கரிப்பு என தமிழர்கள் ஒரு ஆயுதத்தை கையில்எடுத்து ஒரு பேரம்பேசும் சக்தியாக உருவெடுக்க கூடாது தமிழ்களை தோற்கடிக்க வேண்டும் இந்தியாவின் எடுபிடிகளாக தமிழர்கள் அவர்களது காலிலே கிடக்க வேண்டும் என்பற்காக இந்திய கூலிகளான தமிழரசு கட்சி சார்ந்த இந்த தேச துரோகிகள் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தனர்
நான் கேட்கின்றேன் கோட்டா ஒரு போர் குற்றவளி என விரும்பவில்லை என்றால் அவர் வெற்றி பெற்ற பின்னர் ஜ.நாடுகள் மனித உரிமையில் உள்ளக விசாரணை நிறைவேற்ற ஆதரவாக எந்தடிப்படையில் இந்த நாடுகளை வலியுறுத்தினர். இந்த 16 நா.உறுப்பினர்களும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும் என்றனர் இந்த அரியேந்திரன், சுமந்திரன், சிறிதரன், சித்தார்தன், விக்கினேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட சகலரும் உள்ளக விசாரணையை வலியுறுத்தியவர்கள்
கோட்டாவை பாதுகாத்தவர்கள் இவர்கள்தான் இன்று நாமல் ராஜபக்ஸ தமிழர்களுக்கு உரிமையே அதிகாரங்களை கொடுக்கமாட்டேன் வடகிழக்கை இணைக்கமாட்டேன் என்று சொல்லுகின்ற நிலமைக்கு வந்திருக்கின்றது என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த நயவஞ்சவர்கள் இந்த இனைபடு கொலையாளர்களை பாதுகாத்துக் கொண்டதன் விளைவாக இன்று துணிச்சலாக எழுந்து நின்று இன்று நாமலை ஒரு வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
இனப்படுகொலையாளி கோட்டா, மகிந்த, பசில், நாமல் ராஜபக்ஸ உட்பட எல்லோரும் நிற்கின்றனர் என்றால் இவர்கள் சுதந்திரமாக செயற்பட இடம் கொடுத்தவர்கள் யார்? தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான். ஆகவே இந்த பேர் குற்றவாளிகள் வந்துவிடுவார்கள் அவருக்கு வாக்களிக்காவிட்டால் இவருக்கு வாக்களிக்காவிட்டால் வந்திடுவார்கள் என சொன்னது எல்லாம் தமிழ் மக்களுக்காக அல்ல மாறாக தமிழ்மக்களை அச்சப்படுத்தி தேர்தலிலே வாக்களிப்பதற்காக என்ற நோக்கத்திற்காக இந்த அரியேந்திரன் வந்திருக்கின்றார்
அவருக்கு கிடைக்கின்ற எலும்பு துண்டுக்கு வாலாட்டிக் கொண்டு வந்திருக்கின்றார் தேசிய தலைவருக்கு செய்கின்ற துரோகம் விடுதலைப்புலிகளில் இருந்து இந்த உரிமைக்காக உயிர்கொடுத்து 500 ஆயிரம மாவீரர்களுக்கு செய்யும் துரோகம் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்த மண்ணிலே வாழ்ந்து பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 3 இலச்சத்துக்கு அதிகமான தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.





