EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு Uncategorized
பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன – சுரேன் குருசாமி தெரிவிப்பு

பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன – சுரேன் குருசாமி தெரிவிப்பு

ஆவணி 25, 2024
வகை: Uncategorized
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன – சுரேன் குருசாமி தெரிவிப்பு

பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.

வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

எமது கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய மத்திய குழு கூட்டம் வவுனியாவிலே தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றது. கூட்டத்திலே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சம்மந்தமான விடயங்களை எப்படி கொண்டு செல்வது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டதன் காரணமாக தென்பகுதியில் ஏற்படுகின்ற அழுத்தங்களினால் தென்பகுதி வேட்பாளர்களிடமிருந்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களும், கோரிக்கைகளும் வருகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக வருகின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது பற்றியும் இவ் மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன் ஊடாக பொது வேட்பாளரையும், பேச்சுவார்த்தைக்காக எமக்கு வருகின்ற அழைப்புக்களையும் எவ்வாறு கையாள்வது தொடர்பான அனுமதியினையும் ஆலோசனையை மத்திய குழு கூட்டத்தில் எடுத்துக் கொண்டோம்.

ஒரு வேட்பாளரை களம் இறக்கிய பின்னர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் அதாவது தெற்கிலே இருக்கின்ற வாக்குகள் சமமாக பிரிக்கப்படுகின்ற போது குறித்த பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகபட்ச வாக்குகளை வழங்கினால் அதன் ஊடாக தங்களுக்கு ஏற்படுகின்ற நிலைமை குறிப்பாக இரண்டாவது வாக்கு எண்ணும் நிலையில் கூட வெற்றியடைய முடியாது என்ற நிலைமையை அவர்கள் உணர்கின்றனர். ஆகவே பொது வேட்பாளரை களம் இறக்கியது நமக்கு வெற்றி அடைந்துள்ளது இதற்குப் பின்னராக அவர்களிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. என் ஊடாக நாங்கள் ஒரு பலமான நிலைமையில் இருந்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு ஆகும்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக கட்சியிலே பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இருப்பினும் கட்சி எடுத்த ஒரு பொது முடிவிலேதான் நாங்கள் அனைவரும் பயணிக்கின்றோம். இதில் கருத்துக்கள் தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்கப்பட்டாலும் முடிவு என்ற ரீதியில் அனைவரும் ஒருமித்து பயணிக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை
Uncategorized

யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை

மார்கழி 29, 2025
மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்
Uncategorized

மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

மார்கழி 20, 2025
Uncategorized

மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை!

மார்கழி 19, 2025
அதிரடியில் மிரட்டிய சுந்தர் – ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா!
Uncategorized

அதிரடியில் மிரட்டிய சுந்தர் – ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா!

கார்த்திகை 2, 2025
ஒன்டாரியோ வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
Uncategorized

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

ஐப்பசி 23, 2025
மெக்சிகோவில் புயல் – 130 பேர் உயிரிழப்பு!
Uncategorized

மெக்சிகோவில் புயல் – 130 பேர் உயிரிழப்பு!

ஐப்பசி 16, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In