ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்று குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியாவிலுள்ள தனியார் விடுதியோன்றில் நடைபெற்ற இவ் கலந்துரையாடலில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் ஒழுங்கு முறை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி மற்றும் புளொட் அமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.





