ஜனாதிபதி்த் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் மல்லாவியில் நேற்று(31) இடம்பெற்றிருந்தது.
நேற்று பிற்பகல் மல்லாவியில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் யாழ் மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் முன்னாள் போராளிகள் ,மல்லாவி வர்த்தக சங்க பிரதிநிதிகள் தாயக செயலணி ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்





