ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
மேலும் இன்றையதினம் (04.09.2024) தொடக்கம் 06ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை இன்றையதினம் மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில்128,585, மன்னார் மாவட்டத்தில் 90,707, முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர் உள்ளடங்கலாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306,081 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





