நேற்று(05) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த 43, 40 ,39 வயதுடைய நான்கு பெண் பணியாளர்களே இவ்வாறு படுகாயமடைந்தவர்களாவார்.
படுகாயமடைந்த நால்வரும் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மூவர் மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.











