EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் – ரணில் விக்ரமசிங்க

10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் – ரணில் விக்ரமசிங்க

புரட்டாதி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக் கூட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கினார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

உணவு, டீசல், மருந்து இல்லாமல் நாடு முழுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. விசாயத்துக்கு உரமும் இல்லை.

அச்சந்தர்ப்பத்தில் நாட்டை நான் பொறுப்பெடுத்தேன். உணவு, மருந்து இல்லாமல் நீங்கள் துன்பப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதிலிருந்து மீட்க முன் வந்தேன். நாட்டை மீட்டேன்

அனுர, சஜித் யாரும் நாட்டை மீட்க முன்வரவில்லை. உங்கள் பட்டினியில் இருக்கவிட்டார்கள். உணவு, உரம், எரிபொருள், வர்த்தகத்தை முன்னெடுக்க நான் முன் வந்தேன். பாடசாலைகளை திறந்து உங்கள் பிள்ளைகளின் கல்வியை தொடர நடவடிக்கை எடுத்தேன்.

நீங்கள் துன்பபடும் போது யாரும் முன்வரவில்லை. எனது முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வருமாறும், அரசாங்கத்துடன் இணையுமாறும் நான் கேட்டேன். அவர்கள் முன்வரவில்லை.

அவர்கள் தேர்தல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். தேர்தல் நடத்துவதற்கு பணம் செலவாகும். அரசுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்தேன். அவர்கள் வரவில்லை.

ஆனால், வேலை நிறுத்தம், தொழிற்சங்க நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுத்தனர். அதனால் எதுவும் நடக்கவில்லை.

உரம், பணம் , உணவு என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் வகையில் செய்தேன். மண்ணெண்ணை கிடைக்கச் செய்தேன். கடலுக்குச் சென்று மீன்பிடிக்க உங்களுக்கு உதவினேன்.

எமது பணம் வீழ்ச்சியடைந்திருந்தது. டொலரின் பெறுமதி அதிகமாக இருந்த நிலையில் அதனை குறைத்தேன். அதனால், பொருட்களின் விலை படிப்படியாக குறைந்தது.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய தொடங்கியது. வாழ்க்கை செலவு அதிகமாக உள்ளது. அதனை இலகுபடுத்த பல திட்டங்களை வைத்துள்ளேன். அதனை முன்னெடுத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதே அடுத்த 5 ஆண்டு திட்டம்.

ஆனாலும், இப்போது சுமுகமாக வாழ முடிகிறது. இந்த நாட்டிற்க்கு IMF மற்றும் 18 நாடுகள் உதவின. மேலும் கடன்கள் வழங்கி இன்னும் உதவிகளை செய்ய அந்த நாடுகள் முன்வந்துள்ளன.

5 வருடத்தில் இந்த வேலையை நான் முன்னெடுப்பேன். இயலும் சிறிலங்கா எனும் திட்டத்தால் நாட்டை முன்னேற்றுவேன்.

வாழ்க்கை சுமை இலகுபடுத்தல், தொழில் வாய்ப்பு, வரிச்சுமையை இலகுபடுத்துவது உள்ளிட்ட திட்டங்களே அடுத்த 5 வருடங்களில் முன்னெடுக்கப்படும்.

வீழ்ந்திருந்த நாட்டின் வருமானத்தை எட்டுவதற்கு வரி அதிகரிக்கப்பட வேண்டி ஏற்பட்டது. ரூபாவின் பெறுமதி அதிகரித்தது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் எமது பணம் இழக்கின்றது. நாம் எமது உற்பத்தி பொருட்களை ஏற்றமதி செய்ய வேண்டும்.

நவீன விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

இப்போது| உலகத்தில் சனத்தொகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு நாமும் உணவு கொடுக்கலாம். உணவு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதை அதிகரிக்கலாம்.

அதனால் கிராமத்தில் வறுமை குறையும். நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும். அவற்றையே நான் முன்னெடுக்கவுள்ளேன்.

சூரியசக்தி உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறோம். 365 நாளும் சூரிய சக்தி எமக்கு கிடைக்கிறது. சூரிய மின்சக்தியை நாங்கள் இந்தியாவிற்கு விற்களாம்.

10 ,15 வருடத்தில் இங்குள்ள பலர் பணக்காரர் ஆகிவிடுவார்கள். பூநகரியில் அவ்வாறான மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In