தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவியரீதியில் 359 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8பேர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டனர்.
சிறியகுற்றங்கள் மற்றும், சிறிய அபாராத தொகையைச் செலுத்த தவறிய சிறைக்கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.





