தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊடாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இராசேந்திரன்குள கிராமத்தில் வாழ்ந்து வந்த பெண்மணிக்கு எட்டு இலட்சம் ரூபா செலவில் நடுத்தர வீடு, குடிநீர் வசதி மற்றும் மலசலகூடம் அமைத்து இன்று கையளிக்கப்பட்டது.
தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவர் வி.விநோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சன்முகானந்தன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
குறித்த செயற்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பொறியியலாளர் குழுமத்தினால் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





