நாவுல,போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்கதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில் மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச்சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் நாவுல போலீசாருக்கு அறிவிக்கப்பட் டத்தையடுத்து உடனடியாக செயற்பட்டபோலீஸ் உத்தியோகத்தர்கள் நீர்த்தேக்கத்தை நீரை கட்டுப்படுத்தியுள்ளனர்.
பின்னர் தம்புள்ளை போலீஸ் உயிர்க்காப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய இரு பெண்களையும் மீட்டு முதலுதவி செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விபத்தில் சிக்கிய இரு பெண்களும் கொங்கஹவௌ மற்றும் காகம பகுதியைச்சேர்ந்த 20 மற்றும் 25 வயதுடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.




