எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் தலைவிகள் கேட்டுக்கொண்டனர்.
15 வருடத்தை தாண்டியும் எமது இனத்திற்கு எந்த வித தீர்வும் கிடைக்காத நிலைமையில் ஜனாதிபதி தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி எமது சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
தமிழராகிய நாம் பல பேரை இழந்திருக்கிறோம் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் எனவே இவர்களுக்கான நீதி கோரி நாம் கடந்த 15 வருடமாக போராடி வருகிறோம் அரசாங்கத்திற்கு செய்தியை தெளிவாக சொல்லுவதற்கு அனைவரும் தமிழ் மக்கள் பேசும் மக்கள் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.