பொலன்னறுவை-பகமூன பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பகமூன காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பகமூன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பகமூன காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.











