9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் இன்றைய தினம் (21 ) நடைபெற்றது.
இந்நிலையில் இன்றைய தினம் இரவு 10 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாளை ( 22 ) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்களுடைய பாதுகாப்பை கருத்திற்க் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் காலத்தில் வெளிநாட்டிட்க்கு செல்வோர் அல்லது வெளிநாட்டிலிருந்து வருகை தருவோர் தங்களது விமான பயண சீட்டுக்கள் மற்றும் ஆவணங்களை தம்வசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











