EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும்- ஜனாதிபதியிடம் கயேந்திரன் கோரிக்கை!

கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும்- ஜனாதிபதியிடம் கயேந்திரன் கோரிக்கை!

புரட்டாதி 24, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நீங்கள் கனவுகாணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

அநுரகுமாரவும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்தகாலங்களில் முழுமையாக துணைநின்றது.

ஒன்றரைஇலட்சம் அப்பாவி தமிழ்மக்கள் இறுதிப்போரில் மடிவதற்கு இந்த அமைப்பு உதவி புரிந்தது. தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித்துள்ளனர். நாங்கள் அனைவரையும் அரவணைத்துச்செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

நீங்கள் கனவுகாண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். அது எவ்வாறு தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்கமுடியாது உங்களுக்கு அந்த அருகதை கிடையாது. தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக்கொண்டு அந்த விருப்பங்களை அங்கிகரிக்கும் மூலமாக தமிழர்களை இந்தநாட்டின் ஆட்சியிலே பங்காளிகள் ஆக்குவதற்கு துணியவேண்டும்.

அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்று புத்தபிரானையும் எமது கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம். வடகிழக்கு தமிழர்தாயகத்தை அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பினை கொண்டுவருவதனூடாக இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின் பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும்.

அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக இறங்கவேண்டும்என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக்கின்றோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In