EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பொலிஸ் பொறுப்பதிகாரியால் பாலியல் துன்புறுத்தல்

பொலிஸ் பொறுப்பதிகாரியால் பாலியல் துன்புறுத்தல்

புரட்டாதி 26, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் ஆண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பொறுப்பதிகாரி தொடர்ந்தும் தன்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், மனவுளைச்சலுக்கு உள்ளாகி பொலிஸ் வேலையில் இருந்து விலகுவதாக உயர் அதிகாரிகளிடம் கடிதம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருடன் மாதகல் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு, பொறுப்பதிகாரிக்கு தெரிந்த வெளிநபர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் கடலில் குளித்த போது, பொறுப்பதிகாரி, தன்னுடன் அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனை அவர் தடுத்து எச்சரித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, பொலிஸ் நிலையம் வரும் வழியில், விடுதி ஒன்றுக்கு பொலிஸ் உத்தியோகஸ்தரை அழைத்து சென்று, அங்குள்ள அறை ஒன்றிற்குள் பூட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனால், பொலிஸ் உத்தியோகஸ்தர் பொறுப்பதிகாரியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி பொலிஸ் நிலையம் சென்றிருந்தார்.

பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பதிவேட்டு புத்தகத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக எழுதியுள்ளார்.

தொடர்ந்து பொலிஸ் உயர் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனால் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குறித்த சம்பவத்தின் பின்னர் பொறுப்பதிகாரி தன்னை பழிவாங்கும் வகையில் தொடர்ந்து செயற்படுவதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், பொலிஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In