EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாதமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் அபிலாசைகளை முன்கொண்டு செல்லக்கூடியவர்களை களமிறக்க வேண்டும்- உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கோரிக்கை

வவுனியாதமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் அபிலாசைகளை முன்கொண்டு செல்லக்கூடியவர்களை களமிறக்க வேண்டும்- உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கோரிக்கை

புரட்டாதி 28, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

சட்டவாக்கசபைக்கு செல்பவர்கள் குற்றச்செயலோடு சம்பந்தமற்றவர்களாகவும் சுயநலம் அற்றதும் ஊழல் மற்றும் அரசியலால் தனிநபர் முன்னேற்றம் போன்றவற்றைக் தவிர்த்து சமூகம்சார் அறிவுடன் அவைசார்ந்த சிந்தனையை மேலோங்கி கொண்டு செல்லக்கூடிய முற்போக்காளர்களை இந்த அரசியல் களத்தில் களம் இறக்க வேண்டும் என்கின்ற வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கோரிக்கை விடுத்து கட்சி தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தேசம் தற்போது மீண்டும் ஒரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றது.

மக்கள் தங்களுக்கான சட்டவாக்கசபைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற இந்த தீர்க்கமான காலகட்டத்தில் அரசியல் தலைமைகளும் ஜனநாயக ரீதியானதும் காலச்சூழலுக்கு ஏற்றதுமான முடிவுகளை எட்ட வேண்டிய தருணத்தில் உள்ளார்கள்.

இந்த களச்சூழலில் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றமாகிய நாம் தமிழ் மக்கள் மத்தியில் பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தோம்.

அதன் பிரகாரம் அம் மக்களின் அபிலாசைகளை முன்னெடுத்து செல்லும் பொருட்டு சில வெளிப்படுத்தல்களை அரசியல் தலைமைகளுக்கு வழங்குவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் பொறுப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் சில பரிந்துரைகளை முன்வைக்க எண்ணுகின்றது.

அவையாவன, இனங்களுக்கு இடையில் குரோதங்களையோ முரண்பாடுகளையோ ஏற்படுத்தாத வகையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு உண்மைகளை வெளிப்படுத்தி ஜதார்த்த பூர்வமான வாக்குறுதிகளை வழங்கி இந்தத் தேர்தலில் அரசியல் தலைமைகள் தங்களுக்கான தேர்தல் தளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதேவேளை தமிழர் தரப்பில் பல்வேறு நியாயப்பாடான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் காணப்படுகின்றன. காலாகாலமாக அவர்கள் தங்களுடைய அரசியல், சமூக, சமய, கலாசார விடயங்களில் தங்களுக்கான ஒரு உறுதிப்படானதும் நிலையானதுமான தீர்வை வேண்டி நிற்கின்றனர்.

அந்த வகையில் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் ஒரு தீர்க்கமானதும் அர்த்தபுஷ்டியானதும் தற்கால அரசியல் தளத்திற்கு ஏற்றல் போல் நகர்ந்து செல்லக்கூடிய அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும் என்பதோடு சட்டவாக்கசபைக்கு செல்பவர்கள் குற்றச்செயலோடு சம்பந்தமற்றவர்களாகவும் சுயநலம் அற்றதும் ஊழல் மற்றும் அரசியலால் தனிநபர் முன்னேற்றம் போன்றவற்றைக் தவிர்த்து சமூகம்சார் அறிவுடன் அவைசார்ந்த சிந்தனையை மேலோங்கி கொண்டு செல்லக்கூடிய முற்போக்காளர்களை இந்த அரசியல் களத்தில் களம் இறக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே தமிழர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தின் வலிமையை நிலை நாட்டுவதற்காக தமிழர் தரப்பில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் ஓர் அணியில் நின்று அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என கோருவதுடன் இளம் சமூகத்தினரையும் புதியவர்களையும் களம் இறக்கி ஆரோக்கியம் உள்ள ஒரு அரசியல் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதோடு தமிழ் மக்களின் உணர்வுசார் விடயங்களை சகோதர சிங்கள மொழி பேசும் மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றலுள்ளவர்களையும் தெரிவு செய்ய ஆவன மேற்கொள்ளுமாறும் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றமானது அரசியல் தலைமைகளிடம் முன்வைக்கின்றது.

தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் அனைத்தும் விட்டுக்கொடுப்புகளோடும் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சிந்தித்து ஓரணியில் செயற்படுவதற்கு ஏற்றால்போல் ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்தி இந்த பாராளுமன்றத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அரசியல் தலைமைகளிடமும் கோரி நிற்கின்றது.

 

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In