அக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அந்த மாதம் 13ம் திகதி குறித்த பரீட்சை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாணவர்களுக்கு அறிவித்து, மாணவர்களை தயார்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் மாகாண மற்றும் பிராந்திய கல்விப் பணிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.