பஸ் கட்டணங்கள் இன்று நள்ளிரவு (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணத்தை 5.27 வீதத்தால் குறைக்க, தாம் திட்டமிட்டதாகவும், அதனடிப்படையில் இதுவரை 30 ரூபாவாகவிருந்த ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
தேசிய பஸ் கட்டண கொள்கையின்படி இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





