தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிசார் தெரிவித்தனர்
இது பற்றி தெரியவருவதாவது
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெணின் கணவர் இல்லாத நிலையில் தனது 22 மகள் திருமணம் முடித்து வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றதுடன் தாயார் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (6) இரவு மகளின் கணவரான மருமகன் 16 பேர் கொண்ட குழு ஒன்றுடன் வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்து மாமியாரை இருவர் அமரத்தி பிடிக்க அவரை மருமகன் பலாத்தாகரமாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கோண்டுவிட்டு அங்கிருந்த 35 பவுண் தங்க ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸ் நிலையயத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிசார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் இந்த ஈனச் செயலை செய்த மருமகன் அவரது குழுவான 16 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.