கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மெலிபன் வீதியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடத்தின், களஞ்சியசாலையாகப் பயன்படுத்தப்பட்ட மூன்றாவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கொழும்பு மாநகரசபையின் ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.