EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பு பதவி ஆசைக்காக சுக்கு நூறாக உடைந்துள்ளது – கருணா அம்மான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பதவி ஆசைக்காக சுக்கு நூறாக உடைந்துள்ளது – கருணா அம்மான்

ஐப்பசி 9, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

தமிழர்களுக்கு இடம்பெற்று வந்த அநீதிகள் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் கூட்டமைப்பை தேசிய தலைவருடன் சேர்ந்து உருவாக்கியவன் நான் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெறுமனவே ஆசா பாசங்களுக்கும் பதிவிகளுக்காகவும் அடிமையாகி இன்று சுக்கு நூறாகி சிதைவடைந்து கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவே தமிழர்கள் உரிமையை காப்பாற்றுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி கட்சியான எமது கட்சி வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றது என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மொறக்கொட்டான்சேனையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேஷங்கள் தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளது. போலி வேஷங்களை போட்டு மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றி தேசியம் தேசியம் என பேசி வருகின்ற அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர் என இந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு வெளிப்படையாக மக்களுக்கு தெரியவந்துள்ளது.

எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் கடந்த காலத்தில் அந்த சந்தர்பங்களை அவர்களுக்கு வழங்கியிருந்தேன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் என நான் அந்த காலத்தில் இடையூறு விளைவித்ததில்லை தேசிய தலைவருடன் நானும் சேர்ந்து அந்த கட்சியை உருவாக்கியவன்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மதுபானசாலை அனுமதிபத்திரம் சொகுசு வாகனங்ககளை வாங்கி வீடுகளை அமைத்தது மட்டுமன்றி வெளிநாடுகளில் வீடுகளை வாங்கிய அமைச்சர்கள் கூட இருக்கின்றனர், ஆனால் அவர்கள் அங்கு சோரம் போனவர்களாக போய் வெறுமனவே ஆசா பாசங்களுக்கு அடிமையாகி இன்று கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே இந்த நிலையை கருத்தில் கொண்டுதான் இரண்டு முறை நாடாளுமன்றத்தில் இருந்திருக்கின்றேன் 22 வருடகாலம் போராடியிருக்கின்றேன் அன்ரன் பாலசிங்கம் தலமையில் உலகம் முழுக்க பேசியிருக்கின்றேன் ஆனால் இன்றுவரை அதே நோக்கம் சிந்தனையோடு இருக்கின்றோமே தவிர எங்கள் சிந்தனை மாறவில்லை இரண்டுமுறை நாடாளுமன்றத்தில் இருந்தாலும் ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியாது.

பலபேர் என்னிடம் கேட்பார்கள் மதுபான லைசன் எடுத்து நடத்துமாறு 10 மண் பெமிற் எடுங்கள் என்றனர் நான் ஒன்றில் கூட ஆசைப்படாமல் எங்கள் சொந்த உழைப்பில் அதே சாதாரன குடிமகன் போல் தமிழர்களுக்காக வாழ்ந்து வருகின்றேன் எதிர்காலத்தில் எங்கள் வெற்றியின் பிற்பாடு கடுமையாக தமிழர்களுக்கு உழைப்போம்.

ஒரு போதும் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் கேட்பதில்லை என்பது எனது முடிவு எனது குறிக்கோளுமாக இருந்தது.

அதனால் தான் நாங்கள் கப்பல் சின்னத்திலே தமிழ்கட்சியாக தனித்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டோம் தேசிய கட்சிகளுடன் இணைகின்ற போது அது முஸ்லீம் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைகின்றது. அவர்கள் அதிகாரத்தில் வருகின்றார்கள் இதனால் பாரிய பிரச்சனைகள் ஏற்படுகின்றது, எனவே தமிழர்கள் உரிமையை காப்பாற்றுவதற்காக தனி தமிழர்களை வேட்பாளர்களாக நியமித்து போட்டியிடுகின்றோம்.

ஆகவே மட்டக்களப்பு தமிழ் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் பல சுயேச்சை குழுக்களும் பல அரசியல் கட்சிகளும் பிரிந்து போட்டியிடுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் கட்டமைப்பு, போன்ற பல கட்சிகள் போட்டியிடுகின்றது போட்டியிடுவது அவர்களது உரிமை அதனை தடுக்க முடியாது.

இருந்தாலும் தமிழ் மக்களிடம் அன்பாக கேட்பது இன்று உறுதியான தலைமைத்துவத்தை தியாகத்துடன் வழங்க கூடியவர்கள். நாங்கள் பல தியாகங்களை கண்டிருக்கின்றோம் பல போராளிகளை கண்முன் இழந்திருக்கின்றோம். எனது சொந்த சகோதரனை கூட இழந்திருக்கின்றேன் இதே போன்று இங்கு அனைத்து மக்களும் இருக்கின்றனர்.

இரண்டு அமைச்சர்கள் சேவையாற்ற வேண்டும் என விட்டுக் கொடுத்தேன் வாக்குகளை பிரிக்க கூடாது என போராளிகளுக்கு வேண்டுகோளாக விடுத்திருந்தேன். அவர்களை வரவழையுங்கள் என ஆனால் அவர்களின் நடத்தை காரணமாக நாங்கள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளோம் போராளிகள் அனைவரும் ஒன்றினைந்துள்ளனர். எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் அணிதிரண்டு எனது தலைமையின் கீழ் உள்ள எமது கட்சியான கார் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

7 நாட்கள் முன்னர்
வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள 79 குடும்பங்கள்

வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள 79 குடும்பங்கள்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  கால்நடைகள்

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்

13 மணத்தியாலங்கள் முன்னர்
கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

7 நாட்கள் முன்னர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சந்தித்த முக்கிய கட்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சந்தித்த முக்கிய கட்சி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In