முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி நாளையும் தொடரும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று (08) மாலை அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்றது
கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் நாளையும் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது