EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கில் காணி பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு.

வடக்கில் காணி பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு.

ஐப்பசி 9, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

ஏழை மக்களுக்கு உரிய காணிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காணி வழங்குவதில் இடம்பெறும் முறைக்கேடுகள் அநீதிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குரிய பொறுப்பு அலுவலர்கள், தொடர்ந்தும் தவறு செய்யும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சில மாவட்டங்களில் மட்டுமே காணி அலுவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் காணி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக உள்ளதால் அங்கு விசேட கவனம் எடுக்க வேண்டும்.

காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் நாங்கள் உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு அரச உத்தியோகத்தார்கள் சேவையாற்ற வேண்டும். மிக விரைவாகவும் அன்பானதாகவும் தரமானதாகவும் சேவைகளை வழங்குதல் வேண்டும்,

அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் குறித்த காரணத்தை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தாமல் மக்களை மீண்டும் மீண்டும் அலுவலகங்களுக்கு வரவழைக்கக் கூடாது. சில அலுவலர்கள் நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்களை செய்யாமலும் நடைமுறைப்படுத்தக் கூடாத விடயங்களை செய்கின்றனர்.

அவ்வாறானவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்க பெறுகின்றது. அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரச அலுவலர்கள் சரியானவர்களை தேர்வு செய்து காணிகளை வழங்காமை மக்களுக்கு செய்கின்ற துரோகம் என மேலும் தெரிவித்தார்.

அதே வேளை பொதுமக்கள் சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு வருகின்றனர், அவ்வாறான பிரச்சனைகளை தமது பிரதேசத்தில் உள்ள உரிய அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In