உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். பண்டிகை காலங்களில் நாவிற்கு சுவையாக இனிப்பு பண்டங்களை செய்து உண்ணுவதே ஒரு தனி மகிழ்ச்சி. அந்த வகையில் இன்றையதினம் பாசிப்பருப்பு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1/2 கிலோ
பாசிப்பருப்பு 1/2 கப்
வெல்லம் 1/4 கிலோ
ஏலக்காய்த் தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு, வெயிலில் உலர வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை கழுவி வேக வைக்கவும். கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். அதை கம்பி பாகு பதத்தில் காய்ச்சி இறக்கி வைக்கவும்.
அரிசி மாவில், வேகவைத்த பாசிப்பருப்பு, பாகு, ஏலக்காய்த் தூள் போட்டு பணியார மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். சுவையான இனிப்பு பாசிப்பருப்பு பணியாரம் தயார்.