2023 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்டது தொடர்பான வெளிநாட்டு தலையீடு மற்றும் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு மத்தியில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகளில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
டைட்-ஃபார்-டாட்(tit-for-tat) நகர்வுகளில், இரு நாடுகளும் திங்களன்று ஒருவருக்கொருவர் ராஜதந்திரிகளை வெளியேற்றின. “இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய முகவர்களால் கனேடிய குடிமக்களுக்கு எதிரான இலக்கு பிரச்சாரம் தொடர்பாக” ஆறு இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக ஒட்டாவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
“கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் முதல் குற்றவியல் அமைப்புகள் வரை செல்லும் நடவடிக்கைகளின் சங்கிலியை சீர்குலைக்கவும், இந்த நாடு முழுவதும் உள்ள கனேடியர்கள் மீது வன்முறை தாக்கங்களை ஏற்படுத்தவும் இந்திய அரசாங்கம் செயல்பட்டது” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
ஒட்டாவாவில் உள்ள இந்தியாவின் உயர் கமிஷன் மற்றும் வான்கூவர் மற்றும் டொராண்டோவில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் முகவர்கள், நரேந்திர மோடி அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை குறிவைத்த கனடா முழுவதும் டசின் கணக்கான வன்முறைக் குற்றங்களுக்குப் பின்னால் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
காகிதத்தில் அவர்கள் இராஜதந்திர மற்றும் தூதரகப் பதவிகளை வகித்திருந்தாலும், கனடாவில் துப்பாக்கிச் சூடு, கொலைகள், அச்சுறுத்தல்கள், தீ வைப்புகள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயற்பாடுகளில் இந்திய முகவர்கள் முக்கியப் பங்காற்றியதாக இந்த விஷயத்தை நன்கு அறிந்த மூத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.