இரத்தினபுரி, எஹலியகொட பிரதேசத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுவினால் ஜீப்பில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப்பினால் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் கடத்தப்பட்ட மகனை எஹெலியகொட பின்னவல பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் மண்டியிட்டு கைவிலங்கிட்டு அசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தந்தைக்கும் குடும்பஸ்தர்களுக்கும் இடையில் அயலவர் குழுவுடன் சில காலமாக தகராறு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை எஹெலியாகொடவில் உள்ள வீட்டிற்கு 6 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வந்துள்ளனர் .பின்னர் வீட்டில் இருந்த மகனை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் 65 வயதுடைய தந்தை ஜீப்பில் தொங்கியபடி சென்றுள்ளார்.
கடத்தல்காரர்களின் ஜீப்பில் இருந்து கீழே தள்ளப்பட்ட தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு இலக்கான மகன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கில், பணத்தைக் கொடுத்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று வரை தாக்குதல் நடத்திய கும்பலை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.
திருமணத்திற்கு புறம்பான உறவின் அடிப்படையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு குடும்பத்தை சேர்ந்த குழுவினர் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.