லிபரல் கட்சியினர் ஐக்கியமாகவும் வலுவாகவும் உள்ளனர் என கட்சியின் தலைவரும் கனடாவின் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமை பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது . இந்த கூட்டத்தின் நிறைவில் தமது கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 20 கட்சி உறுப்பினர்கள் பிரதமரை தலைமை பதவியில் இருந்து நீங்குமாறு கோருவதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எத்தனை உறுப்பினர்கள் கோரிக்கையை விடுத்தனர் என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.