மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24) இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து உடனடியாக பொலிசாருக்கு அறித்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டிடத்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நாளை வெள்ளிக்கிழமை இருந்து இந்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸக்ரான் காசிமின் ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





