இலங்கை தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளை உறுப்பினர் சின்னத்தைரை சிறிவாஸ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது பேணித் தீருங்கள் என ஐ.நா கூறிவந்தது. 2009ன் பின்னும் அவ்வாறே இருந்தது.
ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவர் இரா.சம்பந்தன், MA.சுமந்திரன்,மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் தான் ஆரம்பத்தில் அமெரிக்காவில் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றம் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள். அமெரிக்க இராஜதந்திரிகளை சந்தித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தினர்.
அதனால் ஜெனீவாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது அத் தீர்மானத்தை தோற்கடிக்க சைக்கிள் கட்சியினர் ஏனைய கட்சியினர் அங்கு வந்து இராஜதந்திரிகளுடன் சர்வதேத விசாரணையே வேண்டாம் என்று பேசிவிட்டு வேளியே வந்து சர்வதேச விசாரணை வலியுறுத்தியவர்கள் தாமே தான் என கூறுவார்கள்.
சம்பந்தர் தலைமையில் தான் நல்லாட்சி கொண்டுவரப்பட்டது, கொடூரங்கள் நிறுத்துவதற்காக ஆட்சியை மாற்றியவர்கள் சம்மந்தர் மற்றும் சுமந்திரனே!
இல்லை இந்த ஆட்சி மாறக் கூடாது கொடூரங்கள் நடக்கவேண்டும் அப்போது தான் சர்வதேச விசாரணை நடத்தலாம் என்று கூறியவர்கள் சைக்கிளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் சிலர்.
இன்று தமிழரசுக் கட்சி பிளவடைந்துள்ளது உண்மை, மக்கள் விசனமடைந்துள்ளமை இதில் இருந்து மாம்பழம், மாங்காயாக பிரிந்துள்ளனர். ஆனால் மக்கள் சிந்தித்து முறைப்படி கணக்குப் பார்த்து தாய்க் கட்சியான தமிழரசுக்கு வாக்களிக் வேண்டும்.