மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க எதிர்காலத்தில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அ. றொஜன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்றைய தினம் (31) பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த தீபாவளி சிறப்பு நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அ. றொஜன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் ..
இதன் போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.