EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ஜனாதிபதி தற்போது மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார் – சஜித்

ஜனாதிபதி தற்போது மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார் – சஜித்

கார்த்திகை 4, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார தற்போது மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழல்வாதிகளின் பணத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு வரும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

எனினும் பணத்தைப்பதுக்கி வைத்தவர்கள் அதில் நல்ல வட்டிகளை உழைத்து சுகபோகமாக உள்ளனர். ஆட்சிக்கு வந்ததிலிருந்து தேசிய மக்கள் சக்தி சிறந்த நகைச்சுவைகளைக் கூறிவருகிறது.

மக்களை ஏமாற்றி ஒருபோதும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, கடவுச்சீட்டுவரிசைக்குத்தீர்வு வழங்குவதற்குப் பதிலாக புதிய வரிசைகளை ஏற்படுத்திவருகிறது.

பொருட்கள் விலை மற்றும் வரி குறைப்புகளை மேற்கொள்ளவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதாகக் கூறிய அநுர அரசாங்கம் இன்று அவர்களிடம் மண்டியிட்டுள்ளது.

ஜனாதிபதி இன்று எரிபொருள் சூத்திரத்தின் பணயக்கைதியாக மாறியுள்ளார்.

சாதாரண டீசல், பெற்றோல் விலைகளைக் குறைக்க சந்தர்ப்பம் இருந்த போதிலும்,ஒக்டென் 95 பெற்றோலின் விலையையும், சுப்பர் டீசல் விலையையும் குறைத்து தனவந்தர்களுக்குச் சலுகை வழங்கியுள்ளார்.

பொருட்கள் விலையைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை அவற்றை செய்வதற்கு நிறைவேற்று அதிகாரம் போதும்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து சர்வதேச நாணயத்துடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In