EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி.

கார்த்திகை 5, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று(04) உத்தரவு பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்தமன் சூரசேன, ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக தேர்தல் திகதியை ஜனாதிபதி உரிய முறையில் நிர்ணயித்துள்ளதாக சட்டமாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

1988ஆம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டத்தின் 10ஆவது பிரிவிற்கு அமைய, தேர்தலை நடத்த உத்தேசிக்கப்படும் திகதி, வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவடையும் தினத்தில் இருந்து கணக்கிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தற்போது தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதன் காரணமாக, மனுதாரரின் கோரிக்கையை வழங்க முடியாதுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

இந்த விடயங்களை கவனத்திற்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

பொதுத் தேர்தலை நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம், அரசியலமைப்பிற்கு முரணானதென தீர்ப்பளிக்குமாறு கோரி கடந்த 21ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாகவே, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

மார்கழி 7, 2025
வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை
இலங்கை

வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை

மார்கழி 7, 2025
அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மார்கழி 7, 2025
யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!
அண்மைய செய்திகள்

யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!

மார்கழி 7, 2025
யாழில் பொலிஸாரால்  முற்றுகையிடப்பட்ட  வீடு
இலங்கை

யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு

மார்கழி 7, 2025
தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்
அண்மைய செய்திகள்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

17 minutes முன்னர்
சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

7 நாட்கள் முன்னர்
இலங்கைக்கு நிவாரணம் அனுப்பியது பங்களாதேஷு!

இலங்கைக்கு நிவாரணம் அனுப்பியது பங்களாதேஷு!

4 நாட்கள் முன்னர்
மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In