ராஜபக்சேக்களுக்கு மாற்றீடாகவே மற்றுமொரு இனவாத கூட்டமான ஜே.வி.பி யினர் தேசிய மக்கள் சக்தி என கூறி ஆட்சிக்கு வந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தலைவரும் நாடளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சத்துர சந்தீப சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார கூட்டம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.