தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு இளங்குமரன் அவர்கள் இன்றையதினம், தனது வாக்கினை யாழ்ப்பாணம் உசன் ராமநாதன் மகா வித்தியாலயத்தில் அளித்தார்.
வாக்களித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த கால தேர்தல்களை விட ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நடைபெறுகின்ற தேர்தலில் ஒரு பாரிய மாற்றம் காணப்படுகிறது. அதுதான் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள புரட்சி என நாங்கள் கூறுகின்றோம். இம்முறை பாரிய ஒரு மாற்றத்திற்காக மக்கள் அணி திரண்டு கொண்டுள்ளார்கள். கிராம மட்ட அபிவிருத்தியயாக எதிர்பார்ப்பு. யுத்தத்துக்கு பின்னர் யாழ்ப்பாணம் செயல் இழந்து கொண்டிருக்கின்றது.
யுத்தத்தில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்கையில் இன்று போதைப் பொருளுக்குள் சிக்கி பல இளைஞர்கள் சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றார்கள்.
அதன் நிமித்தமாக மக்கள் உண்மையானவர்களை தேர்வு செய்து பாராளுமன்றம் அனுப்புவார்கள் என நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.