மஸ்கெலியா பகுதியில் வேன் ஒன்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாகனம் நவம்பர் 9 ஆம் திகதி திருடப்பட்டதாக ஹட்டன் குற்றபுலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டன.
இதன்படி கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓப்பாவத்தை பிரதேசத்தில் 28 வயதுடைய இளைஞரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.