EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அம்பாறையில் கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது.

அம்பாறையில் கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது.

கார்த்திகை 20, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

அம்பாறை இகினியாகல பொலிஸ் பிரிவிலுள்ள வாவின்ன பரகஹகலே பிரதேசத்தில் upட ஒன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) முற்றுகையிட்ட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு விசேட அதிரடிப்படையினர் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள் மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை மீட்டதுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் அம்பாறை வலய கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. குணசிறியின் வழிகாட்டலில் அம்பாறை முகாமின் பதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.சம்பத்குமார அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமின் பதில் முகாம் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் அமில நிரோஷன் ஜயசிங்க உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ். ரத்நாயக்க பொலிஸ் சார்ஜன்ட்டுகளான ஹேரத், ரத்நாயக்க ஜயசிங்க, மானலே, யசரத்ன, குணரத்ன, கொண்ட குழுவினர்

சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையின் போது வீட்டு காணியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த நிலையில் 9 எம்.எம் துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களை மீட்டதையடுத்து 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கைது செய்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ சிறப்புப் படை வீரர் என்பதுடன் போர் நடைபெற்ற வேளை வடபகுதியில் கடமையாற்றி வந்துள்ளார் எனவும் அதன்போது இதனை எடுத்து கொண்டு வந்தாரா? அல்லது விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா? அல்லது இராணுவ களஞ்சிய சாலையில் இருந்து பெறப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? அல்லது பல்வேறு குற்றச் செயலுக்காக எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? என பல கோணங்களில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In