பலாங்கொடை – கல்தொட்ட வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
முஹம்மட் ஷியாம் என்ற 46 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





