நாட்டில் சில இடங்களில் கன மழை பெய்வதால் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நுவரெலியா, கேகாலை ,இரத்தினபுரி, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (23) மாலை 04.00 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (24) மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





