நாட்டில் புதிய ஆட்சி மாற்றத்துடன் கூடிய அமைச்சரவையானது அண்மையில் கூடியது. இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழு ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயர் சேர்க்கப்பட்டு குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவராக முஹம்மது சாலி நளீம் பணியாற்றி இருந்தார்.
இதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
மேலும் குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், முஹம்மத் சாலி நளீம் குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.





