உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.