EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை.

கார்த்திகை 29, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமின்றி, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (28) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்று நிருபங்களின் படி அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்க தற்போது நிதி மூலங்கள் எதுவுமில்லை எனத் தெரிவித்த மன்னார் மாவட்ட செயலர், ஆளுநர் மற்றும், கூட்டுறவு பிரதியமைச்சர் ஆகியோரிடம் 38 மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை தம்மால் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிதி கிடைத்தால் மக்கள் அனைவரும் ஒருவாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ரவிகரன் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு மக்களோடும் கலந்துரையாடி இருக்கிறேன்.

அந்தவகையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தமது வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இந் நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தால் மாத்திரம்தான் மக்களுக்கான உணவுப் பொருட்களோ, நிவாரணங்களோ வழங்கப்படும் எனச் சொல்லப்படுகின்றது.

இதனால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு உணவுப்பொருட்களோ நிவாரணங்களோ எந்த உதவிகளும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகின்றது.

எனவே இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமின்றி, வீடுகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உணவுப் பொருட்களையும், நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அத்தோடு மன்னாரைப் பொறுத்தவரையில் வாய்க்கால் சீரின்மை காரணமாகவே மிக மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும் மக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.

எனவே கழிவுநீர் வாய்க்கால் விடயத்திலும் உரிய திணைக்களங்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு

மார்கழி 7, 2025
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மார்கழி 6, 2025
தெஹிவளையில் சற்று முன்  துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
அண்மைய செய்திகள்

தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மார்கழி 6, 2025
வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!
அண்மைய செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 611ஆக உயர்வு!

மார்கழி 6, 2025
கிறிஸ்து பிறப்பு விழா குறித்து யாழ் மறை மாவட்ட குரு முதல்வரின் அறிவிப்பு!
இலங்கை

கிறிஸ்து பிறப்பு விழா குறித்து யாழ் மறை மாவட்ட குரு முதல்வரின் அறிவிப்பு!

மார்கழி 6, 2025
யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்
இலங்கை

யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்

மார்கழி 6, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

6 நாட்கள் முன்னர்
மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

5 நாட்கள் முன்னர்
வென்னப்புவவில் ஹெலிகொப்டர் விபத்து

வென்னப்புவவில் ஹெலிகொப்டர் விபத்து

7 நாட்கள் முன்னர்
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

3 நாட்கள் முன்னர்
நுவரெலியா பகுதியில் இதுவரை 89 பேர் உயிரிழப்பு – 73 பேர் மாயம்!

நுவரெலியா பகுதியில் இதுவரை 89 பேர் உயிரிழப்பு – 73 பேர் மாயம்!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In