EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரிற்கு ஐக்கிய இராச்சியத்தின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் கையளிப்பு.

மன்னாரிற்கு ஐக்கிய இராச்சியத்தின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் கையளிப்பு.

மார்கழி 3, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு, தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தமது வீடுகளுக்குச் சென்ற நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் ரோன் நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(3) காலை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராட்சியத்தின் (UK) தலைவர் ஜேம்ஸ் பத்திநாதனின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேசச் செயலகத்தின் ஒருங்கிணைப்பில் குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை ஜிம் ரோன் நகர் ஆலயத்தில் இடம் பெற்றது.

மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் மன்னார் மாவட்ட தலைவரும் வடமாகாண முன்னாள் பிரதம செயலாளருமான பத்திநாதன், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ். திவாகரி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக வடமாகணத்தில் மன்னார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அதிகளவான மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வந்தனர்.

தற்போது படிப்படியாக வெள்ள நீர் குறைவடைய மக்கள் நலன்புரி நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்லுகின்றனர்.எனினும் பல இடைத்தங்கல் முகாம்கள் உள்ளது.எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தனவந்தர்கள், தனியார் நிறுவனங்கள் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை முன்னெடுக்கும் தனவந்தர்கள்,தனியார் நிறுவன பிரதிநிதிகள் உதவிகளை முன்னெடுக்கும் போது பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக மக்களுக்கு உதவிகளை வழங்குவது சாலச் சிறந்தது.

எமது ஆலோசனைகளுக்கு அமைவாகவே மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய இராச்சியத்தின்(UK) உலர் உணவு உதவிகள் இக்கிராம மக்களுக்கு வழங்கப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

1 நாள் முன்னர்
யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

5 நாட்கள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2 நாட்கள் முன்னர்
செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

3 நாட்கள் முன்னர்
வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In