EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கு அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவ வேண்டும்.

வடக்கு அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவ வேண்டும்.

மாசி 13, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவிகளை எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், ஐ.நா. முகவர் அமைப்பான யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தால் ஊர்காவற்றுறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புனரமைக்கப்பட்ட மத்திய சிகிச்சை நிலையம் நேற்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ, யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தின் இலங்கைக்கான குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போது,

ஜப்பானிய மக்களுக்கு வடக்கு மக்கள் சார்பாக இந்த இடத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பானிய அரசாங்கத்தால் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகள் எமக்கு கடந்த காலத்திலும் கிடைக்கப்பெற்றிருந்தன. எதிர்காலத்திலும் அந்த உதவிகள் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.

குறிப்பாக தெல்லிப்பழையில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

அதேபோல வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாக உள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அதற்குரிய உள்கட்டுமானங்களுக்கான உதவிகள் தொடர்பிலும் ஆராயுமாறும் இந்தச் சந்தர்ப்பதில் வேண்டுகோள் முன்வைக்கின்றேன்.

அதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுடன் உரையாடும்போது எமக்கு ஏற்பட்டுள்ள ஆளணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். விரைவில் அதனை மேற்கொள்வதாக அவரும் கூறியிருக்கின்றார்.

அதைச் செயற்படுத்துவதன் ஊடாக எமது மாகாணத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரில் 9 சிகிச்சை நிலையங்கள் இவ்வாறு புனரமைப்புக்காக உள்வாங்கப்பட்டு அவற்றில் 8 நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவற்றுக்கான சான்றிதழ்களும் இந்த நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்க திட்டம்!
அண்மைய செய்திகள்

தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்க திட்டம்!

கார்த்திகை 12, 2025
தாளையடி கடற்பகுதிக்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

தாளையடி கடற்பகுதிக்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 12, 2025
அரச எதிர்ப்புப் பேரணி குறித்து மஹிந்தவின் பகிரங்க முடிவு!
அண்மைய செய்திகள்

அரச எதிர்ப்புப் பேரணி குறித்து மஹிந்தவின் பகிரங்க முடிவு!

கார்த்திகை 12, 2025
கத்திக்குத்து சம்பவத்தில் கைதானார்  மைக்கேல் ஜோன்ஸ் 
இலங்கை

பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

கார்த்திகை 12, 2025
துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!

கார்த்திகை 12, 2025
அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்..
அண்மைய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்..

கார்த்திகை 12, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழில் பிறந்த 22 நாட்களில் கிருமி தொற்று காரணமாக குழந்தை உயிரிழப்பு!

யாழில் தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு!

7 நாட்கள் முன்னர்
இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

மீண்டும் உயரும் தங்கத்தின் விலை-அதிர்ச்சியில் இலங்கையர்கள்!

1 நாள் முன்னர்
யாழில். மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்  உயிரிழப்பு

தென்கொரியா மீன் பண்ணையில் இலங்கையர்களின் சடலங்கள் மீட்ப்பு

3 நாட்கள் முன்னர்
யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட முதியவர்

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட முதியவர்

6 நாட்கள் முன்னர்
உயர்தரப் பரீட்சை நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In