உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
மற்றவர்கள் மீதான நம்பிக்கை,எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக வருடாந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இதேவேளை இஸ்ரேல் 8 ஆவது இடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஹமாஸுடனான மோதலால் இஸ்ரேல் பாதிக்கப்பட்ட போதிலும் 8ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் 147 ஆவது இடத்தில் தற்போது தாலிபான்களின் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது.
இது இந்த பட்டியலின் இறுதி இடம் ஆகும்
இதேவேளை இலங்கை 133 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
எனினும் கடந்த தரவுகளில் இலங்கை 128 ஆவது இடத்தில் இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது