எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜனநாயக தேசிய கூட்டணி வவுனியாவில் இன்று தாக்கல் செய்தது.
வேட்புமனுவினை சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தலைமையில் சென்ற வேட்பாளர்கள், மற்றும் ஆதரவாளர்கள் இன்று கையளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் வவுனியாமாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை, தெற்கு தமிழ்பிரதேசசபை ஆகியவற்றில் ஜனநாயக தேசியகூட்டணி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.