மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்துக் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவ பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியன்மாரில் நேற்று முன்தினம் 7.7 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நில அதிர்வினால் 1,600 இற்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 3,400 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதுடன் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன